ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25-ம் தேதியே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குப்பதிவில், 50 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே, வரும் தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டுக்கு கட்சியில் கோரிக்கை வைக்கப் போவதாக சஞ்சய் பதக் கூறியிருக்கிறார்.
இது குறித்து ஊடகத்திடம் பேசிய சஞ்சய் பதக், “நான்கு முறை இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன். விஜயராகவ்கர் தொகுதியை எனது வீடாகவே கருதுகிறேன். இங்கு வசிக்கும் வாக்காளர்கள் அனைவருமே எனக்கு உறவினர்கள். வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு, மக்களின் முடிவு என்னவென்பதை ஒருமுறை எனக்கு நானே மதிப்பீடு செய்துகொள்ள நினைத்தேன். அதனால், இந்த வாக்குப்பதிவை நடத்துகிறேன். வாக்கு எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே பா.ஜ.க தலைமையிடம் எனது விருப்பமனுவைத் தாக்கல் செய்வேன். அதன் பிறகு கட்சி என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். என்னை நான் மதிப்பீடு செய்கிறேன், என்ன ஆணை வரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com