மனிதனின் தற்போதைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போன் மிகவும் தேவையானதாக மாறிவிட்டது. ஒருவர் ஒரு போன் பயன்படுத்தும் காலம் மாறி இரண்டு மூன்று போன்காளை பயன்படுத்தி வருகின்றனர். பயணம் முதல் செலவு வரை அனைத்திற்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறோம். பொருள்கள் வாங்கவோ அல்லது பில் செலுத்துவதற்கோ என அனைத்துப் பரிவர்த்தனைகளும் மொபைல் போனில் தான் தற்போது நடைபெற்று வருகிறது.
ஸ்மார்ட் போன் மட்டும் இருந்தால் போதும் பணம் கையில் தேவையில்லை என்றே சொல்லலாம் அப்பேற்பட்ட போன்களில் சார்ஜ் ஒரு முக்கிய காரணியாகும். சிலர் போனின் தேவை அறிந்து வெளியே செல்வதற்கு முன் 100 சதவீதம் சார்ஜ் செய்து வைப்பார்கள், அப்படி 100 சதவீத சார்ஜ் செய்வதால் போன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா. பிறகு எவ்வளவு சார்ஜ் செய்ய வேண்டும்? உங்கள் கேள்விக்கான பதிலை கீழே பார்ப்போம்
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு எப்போதும் 80-20 ஃபார்முலாவைப் பயன்படுத்தவும். ஏனெனில் இந்த ஃபார்முலா உங்கள் ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் நீடிக்க உதவும். மேலும், இதனால் ஸ்மார்ட்போன் அல்லது பிற பாகங்களை சேதமாவதில் இருந்து தவிர்க்கலாம்.
எனவே ஸ்மார்ட்போனில் சார்ஜிங் 20 சதவீதத்திற்கு கீழே செல்ல வேண்டாம். அதாவது, 20 சதவிகிதம் பேட்டரி மிச்சமிருந்தால், ஸ்மார்ட்போனை எமர்ஜென்சி சார்ஜிங்கில் வைக்கவும், இது பேட்டரியின் மீது அழுத்தம் கொடுக்காது மேலும் பேட்டரி ஆயுளை அதிகரிக்கிறது.
மொபைலை 100 சதவீதம் சார்ஜ் செய்வதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் வெப்பமடைந்து பேட்டரியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பேட்டரி வெடிப்புக்கு வழிவகுக்கும். இதுமட்டுமின்றி பேட்டரி ஆயுளும் குறையும் அபாயம் உள்ளது. எனவே, ஸ்மார்ட்போனை அதிகபட்சமாக 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், மொபைல் போனின் சார்ஜிங் 20 சதவீதத்திற்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். இந்த 80-20 ஃபார்முலாவைப் நீங்களும் கட்டிப்பிடித்து வந்தால் உங்களது சுமார் போனின் ஆயுள் அதிகரிக்கும்.
நன்றி
Publisher: 1newsnation.com