Today Latest News in Tamilnadu 2023
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினார். சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. அதை நாம் ஒழித்து கட்ட வேண்டும். அதே மாதிரி தான் சனாதனத்தை எதிர்க்க கூடாது. அடியோடு ஒழித்து கட்ட வேண்டும். இத்தகைய பேச்சு தற்போது தேசிய அளவில் விவாதாமாக மாறி விட்டது. பலரும் தங்களது ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர், சனாதனத்துக்கு எதிராக பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும், உதயநிதி படத்தை வாளால் வெட்டி, கிழித்து தீ வைத்து எரித்துள்ளார். அதுமட்டுமலாமல், அமைச்சர் உதயநிதியை கொலை செய்ய வேண்டும் என்றும் சவால் விட்டுள்ளார்.
அயோத்தி சாமியாரின் பேச்சுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தக்க பதலடி கொடுத்துள்ளார். அதில் அவர், நான் சனாதனத்தை குறித்து மீண்டும் மீண்டும் பேசுவேன். சனாதனம் பற்றி பேசியதில் எந்த தப்பும் இல்லை. என்னுடைய தலைய சீவ எதுக்கு 10 கோடி? வெறும் 10 ரூபா சீப் போதும், என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in