கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று வடக்கு ஈராக்கில் கிறிஸ்தவ திருமண விழாவை நடத்தும் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 150 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஈராக் வரலாற்றில் திருமண விழாவில் நடந்த மிக மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் கராகோஷ் (அல்-ஹம்தானியா என்றும் அழைக்கப்படும்) கிராமத்திற்கு அருகிலுள்ள திருமண அரங்கின் உட்புறத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்ட தருணத்தைக் காட்டுகிறது, மேலும் சில நொடிகளில் தீ பரவுகிறது.
அந்த வீடியோவில் திருமண ஜோடிகள் நடனமாடி கொண்டிருக்கும்போது மேல அலங்காரத்தில் வைக்கப்பட்டிருக்கும் துணியின் மூலம் நெருப்பு பற்றி கீழே விழுகின்றன. பிறகு அந்த நெருப்பு நாலா பக்கமும் பிடிக்க அரம்பித்துவிட்டது. அங்கிருந்த இடமே தீயினால் சூழ்ந்தது.
ஈராக் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகள், திருமண மண்டபத்தின் வெளிப்புறமானது, நாட்டில் சட்டவிரோதமான மிகவும் எரியக்கூடிய உறைப்பூச்சுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.
மேலும் “அதிக எரியக்கூடிய, குறைந்த விலை கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, தீ விபத்து ஏற்பட்டால் சில நிமிடங்களில் இடிந்து விழும் மண்டபத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன” என்று சிவில் பாதுகாப்பு கூறியது.
திருமண நிகழிச்சியில் நடந்த மோசமான தீ விபத்தில் மணமக்கள் தப்பிவிட்ட போதிலும், அவர்கள் தாங்கள் நேசித்த அனைவரையும் இழந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த மோசமான விபத்தில், மணப்பெண் ஹனீன் தனது தாய், சகோதரர் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரைப் பறிகொடுத்துள்ளார். அதேபோல அவரது கணவர் ரேவனின் உறவினர்கள் 15 பேர் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
நன்றி
Publisher: 1newsnation.com