சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை? என ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிசிஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தசாப்தத்தின் மிக மோசமான தேர்வு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்” என பதிவிட்டுள்ளவர், மற்றொரு பதிவில், “தேசிய விருதுகளுக்கான மகிழ்ச்சியில் திரையுலகில் உள்ள நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது ‘இந்தியா’வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
We in the film ferernity are united in our happiness for this year’s #NationalAwards
Did they leave out ” jaibeem”due to any particular reason or is it the voice if INDIA which has them given jitters .
— pcsreeramISC (@pcsreeram) August 25, 2023
‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது கிடைக்காததற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன், “விருது அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ‘கடைசி விவசாயி’க்கு மகிழ்ச்சி. ஆனால் ‘ஜெய்பீம்’ படத்துக்கு ஏன் எதுவுமில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் நானி இன்ஸ்டா பக்கத்தில் ஜெய்பீம் என எழுதி அதன் அருகே உடைந்த இதயத்தின் எமோஜியை பதிவிட்டுள்ளார். | வாசிக்க > 69-வது தேசிய திரைப்பட விருதுகள் | சிறந்த தமிழ்ப் படமாக ‘கடைசி விவசாயி’ தேர்வு: சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்
நன்றி
Publisher: www.hindutamil.in