கலிபோர்னியா: வரும் செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் ‘Wonderlust’ எனும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் ஐபோன் 15 வரிசை போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் மாடல் போன்கள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் மாடல்களில் ஏ17 பயோனிக் சிப்செட் இடம் பிடித்துள்ளதாகவும், ஐஓஎஸ் 17 இயங்குதளத்தில் இந்த மாடல்கள் இயங்கும் என்றும் தகவல். இந்த போன்கள் ஆப்பிளின் Wonderlust நிகழ்வில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் ஐஓஎஸ் இயங்குதள அப்டேட் இந்த நிகழ்வில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி செப்டம்பர் 12-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன.
நன்றி
Publisher: www.hindutamil.in