Last Updated : 01 Sep, 2023 12:17 PM
Published : 01 Sep 2023 12:17 PM
Last Updated : 01 Sep 2023 12:17 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z7 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இப்போது இந்திய சந்தையில் iQOO Z7 புரோ 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் iQOO Z7 மாடல் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. தற்போது அதன் வரிசையில் Z7 புரோ வந்துள்ளது. இது மிட்-ரேஞ்ச் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 உட்பட பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
iQOO Z7 புரோ சிறப்பு அம்சங்கள்
- 6.74 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7200 சிப்செட்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி/256ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- பின்பக்கத்தில் 2 கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4,600mAh பேட்டரி
- 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- வரும் 5-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை தொடங்குகிறது
- இதன் விலை ரூ.23,999 முதல் தொடங்குகிறது. விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Introducing India’s Fastest Smartphone** #iQOOZ7Pro5G with Dimensity 7200 Processor, 120Hz Curved AMOLED Display, 64MP OIS AURA Light Camera and much more. Explore the #FullyLoaded life with #iQOOZ7Pro5G, launching on Aug 31, 12PM @amazonIN & https://t.co/ZK4Krrdztq. pic.twitter.com/IDHEYoAG7s
— iQOO India (@IqooInd) August 30, 2023
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in