சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துவரும் நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.7ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் ஜவான் ரிலீஸுக்கு முன்பாக நடிகை நயன்தாரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதில் தன் குழந்தைகளான உயிர், உலகம் ஆகியோரின் முகம் தெரியும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலானது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் சாதனைப் படைத்துள்ளார். கணக்குத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பத்துலட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடரத் தொடங்கியுள்ளனர். இவ்வளவு விரைவாக அதிக பாலோயர்களை கொண்ட நடிகையாக நயன்தாரா சாதித்துள்ளார். இதற்கு முன், நடிகை கேத்ரினா கைஃபுக்கு 10 லட்சம் பாலோயர்கள் 24 மணி நேரத்தில் கிடைத்திருந்தனர்
நன்றி
Publisher: www.hindutamil.in