சென்னை: ரசிகர்கள் கணித்தபடியே ‘ஜெயிலர்’ வெற்றிக்காக படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநி திமாறன் Porsche காரை பரிசளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் தொடர்ந்து ஒரு பெரும் வெற்றி தேவையாக இருந்தது. அந்த வெற்றியை ‘ஜெயிலர்’ பெற்றுக் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலை குவித்துள்ள இப்படம் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அண்மையில் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றை பரிசளித்தார். அடுத்து BMW X7 கார் ஒன்றையும் கொடுத்தார்.
அடுத்து ரஜினியின் ‘கம்பேக்’க்குக்கு காரணமான நெல்சனுக்கும் செக் கொடுத்தவர், Porsche காரை அன்பளிப்பாக கொடுத்தார். முன்னதாக, நெட்டிசன்கள் நெல்சனுக்காக குரல் கொடுத்திருந்தனர். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு அனிருத் முக்கிய காரணம் என பலரும் தெரிவித்து வந்த சூழலில் அனிருத்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்திருந்தார். இதனையடுத்து அவருக்கு கார் ஒன்று பரிசு வழங்கப்படலாம் என ரசிகர்கள் கணித்த நிலையில், Porsche காரை அனிருத்துக்கு கிஃப்ட் செய்துள்ளார் கலாநிதிமாறன்.
நன்றி
Publisher: www.hindutamil.in