மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) | பலன்கள்: முயற்சிகளினால் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த வாரம் மனோதிடம் அதிகரிக்கும். வீண்குழப்பம் ஏற்படலாம். பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும்.
தம்பதிகளிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்வியை அதிகம் சிரத்தை எடுத்து பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு இலுப்பை எண்ணையால் தீபம் ஏற்றி வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) | பலன்கள்: மனோதிடம் அதிகம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றி தரும். பணவரத்து திருப்தி தரும். சுபச்செலவுகள் அதிகமாகும். திடீர் கோபம் ஏற்பட்டு நீங்கும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பது நல்லது. பங்குதாரர்களிடம் பேசும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
பெண்களுக்கு மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் சிறிய வேலையும் முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சினை தீரும்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) | பலன்கள்: நிதானமாக எதையும் செய்து வெற்றி பெறும் உங்களுக்கு இந்த வாரம் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிக்கு எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். தொலைதூர தகவல்கள் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
பெண்கள் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆசிரியர்கள் சக மாணவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும். இந்த வாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
நன்றி
Publisher: www.hindutamil.in