சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காக அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி வழங்கினார் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ காவேரி கலாநிதி.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் ரூ.600 கோடியை வசூலித்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மகிழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு காசோலையுடன், BMWX7 கார் ஒன்றை பரிசளித்தார். தொடர்ந்து இயக்குநர் நெல்சனுக்கு காசோலையும் Porsche காரையும் வழங்கினார். இதேபோல அனிருத்துக்கும் காசோலை + கார் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஇஓவும், கலாநிதி மாறனின் மனைவியுமான காவேரி கலாநிதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 100 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி ரூபாய் நிதியை அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் துணைத் தலைவர்கள் டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஹேமந்த் ராஜாவிடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் சிகிச்சைக்காக ரூ.60 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார் காவேரி கலாநிதிமாறன். இந்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in