சாவோ பாவ்லோ: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று தொடங்கி உள்ளது. இதில் தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் நேற்று பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் – பொலிவியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ரோட்ரிகோ (24 மற்றும் 53-வது நிமிடங்கள்), நெய்மர் (61 மற்றும் 90 3 நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும் ரஃபின்ஹா (47-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.
இந்த ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த மறைந்த ஜாம்பவான பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார் நெய்மர். 3 முறை உலகக் கோப்பையை வென்றிருந்த பீலே 92 ஆட்டங்களில் விளையாடி 77 கோல்கள் அடித்திருந்தார். தற்போது நெய்மர் 78 கோல்கள் அடித்து பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in