காதல் காவியங்களின் வரிசையில் பல திரைப்படங்களை அடுக்கி வைத்தாலும் முதலிடத்தில் வைத்துக் கொண்டாடப்படும் படம், ‘தேவதாஸ்’. காதல் தோல்விக்காகத் தாடியை அடையாளம் காட்டிய படமும் இதுதான். இந்தப் படத்தின் காதலர்களான தேவதாஸ் – பார்வதி பற்றி நம் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டால் கண்ணீர் பொங்கக் கதைச் சொல்லலாம். ஐம்பதுகளில் வெளியாகி, இன்று வரை காதலின் அடையாளமாக இருக்கும் ‘தேவதாஸி’ன் கதை சோகத்தின் உச்சம்.
ஜமீன் வீட்டு மகன் தேவதாஸுக்கும் ஏழை பார்வதிக்கும் காதல். இவர்கள் திருமணம் பற்றி பார்வதியின் பாட்டி, ஜமீன்தாரிடம் பேச, மறுத்துவிடுகிறார் அவர். இதனால் பார்வதியை, வயதான ஜமீன்தாருக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார் அவர் தந்தை. தேவதாஸ், தாடி வளர்த்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் என்று கதைச் செல்லும்.
நன்றி
Publisher: www.hindutamil.in