சென்னன: ‘ஜப்பான்’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த இதன் இறுதிக்கட்டப் படபிடிப்பு கடந்த ஜூன் 24-ம் தேதி முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங்கை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோ:
நன்றி
Publisher: www.hindutamil.in