சென்னை: சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியை முதல்முறையாக கேப்டனாக வழிநடத்தி இருந்தார் தோனி. அடுத்தடுத்த நாட்களில் பல கோப்பைகளை குவிக்க உள்ள மகத்தான கேப்டன் திறன் கொண்ட ஒருவரின் சகாப்தத்தின் தொடக்கம் அது என அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். கேப்டனாக முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டார். அந்தப் போட்டியில் பவுல்-அவுட் முறையில் இந்தியா வாகை சூடி இருக்கும். பின்னர் அந்த தொடரில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா (அரையிறுதி), பாகிஸ்தான் (இறுதிப் போட்டி) வீழ்த்தி உலகக் கோப்பை பட்டத்தை இந்தியா வென்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் பவுல்-அவுட்டில் சுழற்பந்து வீச்சாளர்களை தோனி பயன்படுத்தி தனது கேப்டன்சி திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
தோல்வியில் இருந்து நிறைய பாடங்களைப் பெற முடியும். ஆனால், வெற்றி பெற்றாலும் அதிலிருந்து பாடங்களை பெறுபவர்கள் தான் சாம்பியனாக முடியும் என தோனி தன்னிடம் தெரிவித்தாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்திருந்தார். அதுதான் இந்நேரத்தில் மனக் கண் முன்னே வந்து போகிறது.
அதற்கு ஏற்ப 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சிறந்த பினிஷர், அபார பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என அறியப்படும் தோனி, கிரிக்கெட் உலகின் மகத்தான கேப்டனும் கூட.
நன்றி
Publisher: www.hindutamil.in