இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார் முகமது சிராஜ். மேலும் ஆசியக் கோப்பை போட்டியில் வக்கார் யூனிஸின் சிறப்பான பந்துவீச்சையும் (6வி/26) முந்தினார்.
ஒருநாள் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு வரிசையில் முதல் இடத்தில் ஸ்டூவர்ட் பின்னியும் (6வி/4), 2-வது இடத்தில் அனில் கும்ப்ளேவும் (6வி/12), 3-வது இடத்தில் ஜஸ்பிரீத் பும்ராவும் (6வி/19), 4-வது இடத்தில் முகமது சிராஜும் (6வி/21) உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு வரிசையில் 4-வது இடத்தையும் சிராஜ் பிடித்துள்ளார். ஒரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை
சிராஜ் பெற்றுள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in