இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கில் ஆக்ரோஷ அணுகுமுறையை பின்பற்றி வரும் அந்த அணி உலகக் கோப்பை தொடருக்காக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை திரும்ப அழைத்து வந்துள்ளது. 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்த பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்களிப்பை வழங்கி இருந்தார். இம்முறையும் அவர் துருப்பு சீட்டாக இருக்கக்கூடும்.
கடந்த ஆண்டில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 498 ரன்களை வேட்டையாடி பிரம்மிக்க வைத்தது. இந்த வேட்டையை உலகக் கோப்பை தொடரிலும் நிகழ்த்த இங்கிலாந்து அணி ஆயத்தமாகி உள்ளது. இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிக்கு பிறகு தொடர்ச்சியாக இரு முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெறும்.
இங்கிலாந்து அணி வீரர்கள்
உலகக் கோப்பையில் இதுவரை
உலகக் கோப்பை சாதனைகள்: 1975-2019; ஆட்டங்கள் 84; வெற்றி 48; தோல்வி 33 வெற்றி சராசரி 58.33; டை 2; முடிவு இல்லாதது 1.
மோதல் விவரம்
நன்றி
Publisher: www.hindutamil.in