Last Updated : 02 Oct, 2023 03:12 PM
Published : 02 Oct 2023 03:12 PM
Last Updated : 02 Oct 2023 03:12 PM
மும்பை: விமானப் படை அதிகாரியாக கங்கனா நடித்திருக்கும் ‘தேஜஸ்’ திரைப்படம் வரும் அக். 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் ‘தேஜஸ்’. 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் இப்படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் விமானப் படை விமானி உடையில் கங்கனா போர் விமானம் ஒன்றில் புறப்படுவது போன்ற சிறிய கிளிம்ப்ஸ் காட்டப்படுகிறது. இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இப்படம் 20ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in