சென்னை: விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். இதில் ரித்துவர்மா நாயகியாக நடித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 5 நாளில் ரூ.50 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், படம் வெளியாகி 19 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், இப்படம் இந்தியிலும் வெளியிடப்பட்டது. இதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டத்தாக விஷால் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in