சென்னை: உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓப்பனரை டக் அவுட்டாக்கியதன் மூலம் பும்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். அதேபோல இந்த கேட்சை பிடித்ததன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற பெருமையை கோலியும் பெற்றுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் 2வது ஓவரில் பும்ரா வீசிய பந்து மிட்செல் மார்ஷ் பேட்டில் இன்சைடு எட்ஜாகி கோலியின் கைக்குள் ஐக்கியமானது.
இதன் மூலம் மிட்செல் மார்ஷ் 6 பந்துகளை பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார். இது ஒருவகையில் பும்ராவின் பழிவாங்கல் என எடுத்துகொள்ளலாம். காரணம் ராஜ்கோர்டில் நடந்த ஒருநாள் போட்டியில் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து பும்ராவை மார்ஷ் அவுட்டாக்கியிருந்தார். மேலும், மிட்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய ஓப்பனரை டக்அவுட்டாக்கி பும்ரா புதிய வரலாறு படைத்துள்ளார்.
அதேபோல இந்த கேட்சை பிடித்ததன் மூலம் உலக கோப்பைகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் (விக்கெட் கீப்பர் அல்லாமல்) என்ற பெருமையை அடைந்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே 14 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்த இடங்களில் 12 விக்கெட்டுகளுடன் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in