மும்பை: தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் தெரிவித்ததை அடுத்து நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை காவல்துறை ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளது.
’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான், மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஷாருக்கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்த மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி இனி அவருடன் ஆறு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் எந்நேரமும் இருப்பார்கள். இதுதவிர அவரது வீட்டைச் சுற்றி ஆயுதம் ஏந்திய நான்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, அவருக்கும் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரூ.1000 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தன.
நன்றி
Publisher: www.hindutamil.in