சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், வடசென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கும் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்களைக் கொண்ட இலவச சட்ட மையம் என்ற திட்டத்தை அவர் அறிவித்திருந்தார் . முதல் கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தினர், வட சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையத்தைத் தொடங்கியுள்ளனர். விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் இதை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு இந்தச் சட்ட மையத்தின் மூலம் முறையான ஆலோசனை வழங்கப்படும். கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கும், வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு உதவுவது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது பிரச்சனைகளுக்கு சட்டரீதியாகத் தீர்வு காண வழிவகை செய்வது குறித்தும் சிறப்பான சட்ட ஆலோசனைகளை இங்கு வழங்க வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in