மும்பை: நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ மூலம் இந்திக்குச் சென்றார். அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நயன்தாராவுக்கு இந்தியில் வாய்ப்புகள் வருவதாகக் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் இந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ’பைஜு பாவ்ரா’ படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, 1952-ம் ஆண்டு வெளியான ‘பைஜு பாவ்ரா’ என்ற கிளாசிக் படத்தின் ரீமேக்.
இதில் ரன்வீர் சிங், ஆலியா பட் ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இப்போது இதில் நயன்தாராவும் இணைந்துள்ளார் என்கிறார்கள். இந்தப் படத்தில், நயன்தாரா இன்னும் ஒப்பந்தமாகவில்லை. அவரிடம் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in