கராச்சி: 13-வது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் மோத உள்ளன. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதி உள்ளன. இதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறும்போது,“1996-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் நாங்கள் இந்தியாவிடம் தோல்வி அடைந்தோம். அப்போது அது நரகமாக இருந்தது. அந்த தோல்வியை யாரும் ஜீரணிக்கவில்லை, நாங்கள் பலத்த பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டியிருந்தது, பல நாட்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.
தொடர் தோல்வி என்னும் சங்கிலி இம்முறை உடைக்கப்படும். பாகிஸ்தான் அணி அதைச் செய்யும் திறமை கொண்டது. ஏனெனில் டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்குப் பின்னர் 2021-ம் ஆண்டு துபாயில் பாகிஸ்தான் அதை செய்து காட்டியது. இப்போது 50 ஓவர் உலகக் கோப்பையில் தொடர் தோல்வி துரதிருஷ்டம் விலகும்” என்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in