மும்பை: படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கங்கனா பேசியதாவது: “படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்கினால் ராணுவத்தில் இருக்கும் சோம்பேறிகளையும் பொறுப்பற்றவர்களையும் ஒழிக்க முடியும். அது அவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கும்.
சீனா மற்றும் பாகிஸ்தான் மீது பாலிவுட் கலைஞர்கள் அன்பை பொழியும்போதும், கிரிக்கெட் வீரர்கள் அவர்களை கட்டியணைக்கும்போதும் நான் மட்டும்தான் அவர்களை எதிரிகளாக நினைக்கிறேனா? இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகை எனக்கு மட்டும்தானா? இதற்காகத்தான் நாங்கள் ‘தேஜஸ்’ படத்தை உருவாக்கியுள்ளோம். வீரர்கள் எல்லையில் சண்டையிடும் நேரத்தில், நாட்டு மக்கள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் பேசும்போது ஒரு ராணுவ வீரர் எப்படி உணருகிறார் என்பதை இப்படம் காட்டுகிறது”. இவ்வாறு கங்கனா தெரிவித்தார்.
சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் ‘தேஜஸ்’. இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in