துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.19 – 25

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.19 - 25

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சூர், செவ்வாய், புதன் – சுக ஸ்தானத்தில் சனி (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது. | கிரக மாற்றங்கள்: 23.10.2023 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் உங்களுக்கு இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும்.

உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். அரசியல்துறையினருக்கு செயல்திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 23.10.2023 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய உங்களுக்கு இந்த வாரம் வாக்குவன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அவர்களுக்கு கீழே உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 23.10.2023 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய உங்களுக்கு இந்தவாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வார இறுதியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். கலைத்துறையினருக்கு மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள்.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *