மும்பை: கிரிக்கெட்டர் தோனியை நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ள ‘கணாபாத்’ (Ganapath) பாலிவுட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் ‘Kalki 2898 AD’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கிரிக்கெட்டர் தோனியை நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் அமிதாப் பச்சன் இளஞ்சிவப்பு நிற குர்த்தாவும், தோனி ஜீன்ஸ், டி-சர்ட்டும் அணிந்துள்ளனர். ஆனால், இருவரும் சந்தித்தற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 17-ஆம் தேதி நடிகர்கள் ராம் சரணும், ரன்வீர் கபூரும் தோனியை சந்தித்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in