இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணத்துக்கு இடம்தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சொந்த பந்தங்கள் கேட்ட உதவியை செய்வீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திப்பீர்கள். விஐபிகளிடம் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். சுபச் செலவுகள் வரும். பேச்சில் பொறுமை தேவை.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பணப் புழக்கம் அதிகரிக்கும் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உதாசீனப்படுத்தி பேசுவார்கள். அதை பொருட்படுத்த வேண்டாம். வேலைச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: தொழிலில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். உங்கள் ஆலோசனை, முடிவுகளை அனைவரும் ஏற்று நடப்பார்கள்.

மகரம்: உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். நட்பு வழியில் நல்ல சேதி கேட்பீர்கள். உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறும். அனை வரையும் அரவணைத்து செல்வீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். திடீர் வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டாகும்.

மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். குடும்பத் தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *