கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்து விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டாப் 4 அணிகளில் ஒன்றாக தொடரை நிறைவு செய்யும் என பாகிஸ்தான் அணியின் ரசிகர் காஸி மோஷின் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளை தழுவி இருந்தது. இந்த சூழலில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாட உள்ளது.
“நாங்கள் நீண்ட காலமாக பாகிஸ்தான் அணி ஆதரித்து வருகிறோம். அதனால் பாகிஸ்தான் அணி வீழ்ச்சி காணும் போது அதே அளவிலான வேகத்தில் எழுச்சி காணும் என்பதை நாங்கள் அறிவோம். அந்த வகையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். அதன் மூலம் டாப் நான்கு அணிகளில் ஒன்றாக நாங்க இடம் பெறுவோம்” என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர் காஸி மோஷின் தெரிவித்துள்ளார்.
#WATCH | Kolkata, West Bengal: “We have been supporting the Pakistan team for a very long time. We know that when the Pakistan team goes down it goes up with the same speed. From now on I’m hoping they will win the rest of two other games and they’ll qualify for the top four…,”… pic.twitter.com/DdkerygcDq
— ANI (@ANI) October 31, 2023
நன்றி
Publisher: www.hindutamil.in