திருமலை திருப்பதி: நவ. 10-ல் ஆன்லைனில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று முன்தினம் கூறியதாவது: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

டிசம்பர் 23-ம் தேதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 10-ம் தேதி முதல் தினமும் 22,500 வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படும். 20 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் 4 லட்சத்து 25 ஆயிரம் இலவச டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *