சென்னை: அஜித்குமார், ரம்பா நடித்த ‘ராசி’, நவ்தீப், மதுமிதா நடித்த ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படங்களை இயக்கியவர் முரளி அப்பாஸ். இவர் ‘கிடாரி’ பிரசாத் இயக்கியுள்ள ‘மத்தகம்’ வெப் தொடரில் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: தொடர்ந்து படம் இயக்குவதற்கு வாய்ப்பு தேடி வந்தேன். அரசியல் ஆசை இருந்ததால், கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்தேன். கடந்த சில வருடங்களாகக் கட்சியின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறேன். என் சகோதரர் ஒருவருக்காக ‘கிடாரி’ இயக்குநர் பிரசாத்திடம் வாய்ப்புக் கேட்டேன். அவர் அந்த தொடரில் என்னையும் நடிகராக்கி விட்டார். ‘மத்தகம்’ தொடரில் கவுன்சிலராக நடித்துள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து செல்வராகவன் அசிஸ்டென்ட் மணிகண்டன், மகிழ் திருமேனி அசிஸ்டென்ட் நெல்சன், வெற்றிமாறன் அசிஸ்டென்ட் விகர்ணன் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கட்சி பணியில் இருந்து கொண்டு தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்துள்ளேன். இவ்வாறு முரளி அப்பாஸ் கூறினார்.
நன்றி
Publisher: www.hindutamil.in