ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிடோர் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை சட்டவிரோதமாக 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவி ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் , உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ஜப்பான் படம் வெளியாகயுள்ளது. மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படம் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *