சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் போன்றவர்களால் மனித குலத்துக்கே அவப்பெயர் என தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா. பாலியல் ரீதியான கருத்தை மன்சூர் அலிகான் தெரிவித்த நிலையில் அவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் த்ரிஷா பதிவு செய்துள்ளார்.
“மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்றை நான் பார்த்தேன். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், அவமரியாதையாகவும், வெறுக்கத்தக்க வகையிலும், பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார். அவர் என்னுடன் திரையில் இணைந்து நடிக்க விரும்பலாம். ஆனால், இதுவரை இது போன்றதொரு நபருடன் நான் நடிக்கவில்லை என்பது ஆறுதல்.
இனி வரும் நாட்களிலும் எனது திரை வாழ்க்கையில் நான் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர்” என த்ரிஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ
ஒன்றில் மன்சூர் அலிகான் சர்ச்சை ரீதியாக பேசி இருந்தார். அதில் அண்மையில் வெளியான தமிழ் திரைப்படம் ஒன்றில் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைப்பதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
The context pic.twitter.com/n0ge3Qkzer
— Aryan (@chinchat09) November 18, 2023
நன்றி
Publisher: www.hindutamil.in