சென்னை: மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை ஐசிஎப் உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் எஸ்.கார்த்திகேயன் 7-11, 3-11, 12-10, 11-6, 13-11, 6-11, 11-3 என்ற செட் கணக்கில் எஸ்.பிரேயஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் பி.காவ்ய 11-8, 11-5, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் செலீனா தீப்தியை வீழ்த்தி பட்டம் வென்றார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர் பிரிவில் எஸ்.பிரேயஷ், சிறுமியர் பிரிவில் எம்.அனன்யா, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர் பிரிவில் அபினந்த், சிறுமியர் பிரிவில் ஸ்ரேயா ஆனந்த், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர் பிரிவில் சித்தார்த், சிறுமியர் பிரிவில்அனன்யா, 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர் பிரிவில் ஆகாஷ் ராஜவேலு, சிறுமியர் பிரிவில் வார்னிகா, 11 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர் பிரிவில் அஸ்வஜித், சிறுமியர் பிரிவில் பவித்ரா ஆகியோரும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in