பிரபல இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், ரஜினிகாந்துடன் ‘உத்தர் தக்‌ஷின்’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மும்பையில் தனது கணவர் ஸ்ரீராம் நேனேவுடன் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்தார் மாதுரி தீக்‌ஷித்.
அப்போது எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உத்தர் தக்‌ஷின் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் என்னிடம் மராத்தியில்தான் பேசுவார். அது இப்போதும் நினைவிருக்கிறது. எப்போது சந்தித்தாலும் அந்தப் படத்தை நினைவு கூர்வார். அவர் சிறந்த மனிதர். அவரைச் சந்தித்தது அற்புதமாக இருந்தது. அவருடைய பணிவு, மரியாதையைக் கண்டு எப்போதும் ஆச்சரியப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in