மும்பை: பதான், ஜவான் படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம், ‘டங்கி’. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இதில் டாப்ஸி பன்னு, விக்கி கவுசல், விக்ரம் கோச்சார் உட்பட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. பிரீத்தம் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு முரளிதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, ‘டங்கி: டிராப் 1’ என்று இந்தப் படத்தின் டீஸர் இம்மாத தொடக்கத்தில் வெளியிடப் பட்டது. இப்போது ‘டங்கி: டிராப் 2’ என்ற பெயரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘லுட் புட் கயா’ என்று தொடங்கும் இந்த மெலடி பாடலை அர்ஜித் சிங் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கான நடனத்தை கணேஷ் ஆச்சரியா அமைத்துள்ளார். ஐந்து நண்பர்களின் அழகான பயணமும் அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் தான் இதன் கதை என்று கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in