திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையானை தரிசிப்பதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, திருமலையில் தங்கும் அறையும் வழங்குகிறது.
ஆதலால் பக்தர்கள் எவ்வித சிபாரிசையும் எதிர்பாராமல் ஆன்லைனில் முன்பதிவு செய்து, சுவாமியை தரிசித்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் உள்ளிட்ட பல தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் 2024 பிப்ரவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ttdevasthanams.ap.gov.in எனும் இணையதள முகவரியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.