24 மணி நேரத்துக்குள் 100 மில்லியன் பார்வைகள் – ‘சலார்’ ட்ரெய்லர் சாதனை!

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள்ளாகவே யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் இந்தப் படம் செப். 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், வெளியான 18 மணி நேரத்தில் ‘சலார்’ ட்ரெய்லர் யூடியூபில் நூறு மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கில் 25 மில்லியன், இந்தியில் 41 மில்லியன், தமிழில் 7.4 மில்லியன், கன்னடத்தில் 8.4 மில்லியன், மலையாளத்தில் 6.5 மில்லியன் பார்வைகளை இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது. மேலும் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற வீடியோ என்ற சாதனையையும் இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது.

Salaar Tamil Trailer | Prabhas | Prashanth Neel | Prithviraj|Shruthi|Hombale Films|Vijay Kiragandur

'+divToPrint.innerHTML+'