மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’ படத்துக்கு எதிர்ப்பு

கொச்சி: மம்மூட்டி நடித்துள்ள ‘காதல் தி கோர்’ படத்துக்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மம்மூட்டி, ஜோதிகா உட்பட பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‘காதல் தி கோர்’. மம்மூட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தை ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ ஜியோ பேபி இயக்கியுள்ளார். நவ.23- ம் தேதி வெளியான இந்தப் படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக மம்மூட்டி நடித்துள்ளார்.

இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கேரள கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாதிரியார்கள் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவத்துக்கு எதிராக ‘காதல் தி கோர்’ படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தன்பாலின ஈர்ப்பாளர்களைக் காட்சிப்படுத்த கிறிஸ்தவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.