Last Updated : 07 Dec, 2023 05:24 AM
Published : 07 Dec 2023 05:24 AM
Last Updated : 07 Dec 2023 05:24 AM
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பெய்த தொடர் மழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதில் பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. அந்தப் பகுதிகளில் வெளியே செல்ல முடியாமல் தவித்தவர்களைப் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். இந்நிலையில் நடிகை கனிகா, தனது குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்ததாகவும் மீட்புக் குழுவினர் மீட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது குடியிருப்பு பகுதியைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், குடிநீர் விநியோகம் இல்லை, மின்சாரம் இல்லை. வெள்ளம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் எங்களுக்கு வேறு வழி இல்லை. மீட்புக் குழுவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அவர் குடியிருப்பில் இருந்த 150 பேர் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
FOLLOW US
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in