நாட்டுப்பற்றும், நாயக பிம்பமும்… – ஹிர்த்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ டீசர் எப்படி?

சென்னை: ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ பாலிவுட் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைக்கிறார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? – நாட்டுப்பற்று படங்கள் இன்னும் பாலிவுட்டில் உயிருடன் இருக்கின்றன. அந்த வகையில் ‘ஃபைட்டர்’ நாட்டுப்பற்றுடன் விமானப்படை வீரர்களின் சாகசங்களை வைத்து புதுவித திரைக்கதையாக உருவாகியிருப்பதை டீசர் உணர்த்துகிறது. எந்த வசனமும் இல்லாமல் வெறும் காட்சிகளாக நகரும் டீசரில், முழுக்க விமானப்படை சாகசங்களும், ஹீரோயிசமும், தேசியக்கொடியும் தான் வந்து செல்கின்றன.

படத்தின் தன்மையை உணர்த்த ஜனவரி 25-ம் தேதி, அதாவது குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் படம் வெளியாகிறது. இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஷாருக்கானின் ‘பதான்’ படத்தை இதே இயக்குநர்தான் இயக்கியிருந்தார். தற்போது அதே நாட்டுப்பற்றை வைத்துக்கொண்டு ஹீரோவை மட்டும் மாற்றி ‘ஃபைட்டர்’ என புதிய படத்தை இயக்கியிருக்கிறார். டீசர் வீடியோ:

Fighter - Teaser | Hrithik Roshan | Deepika Padukone | Anil Kapoor | Siddharth Anand | 25 Jan 2024

'+divToPrint.innerHTML+'