இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை நல்வழிப்படுத்தி பொறுப்புடன் வளர்க்க எண்ணுவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: வெளி நாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பழைய வழக்குகள் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

துலாம்: ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. கலை பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: கணவன் – மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சகோதர வகையில் கருத்து மோதல் வரும். தாயார்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

மகரம்: தடைபட்டுவந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். சொந்த – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர். புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். புதிய பதவி உங்களை தேடி வரும்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். கலை பொருட்கள் சேரும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.