டர்பன்: தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி டர்பன் நகரில் இன்று நடைபெற இருந்தது. ஆனாலும் தொடர்ந்து மழை பொழிந்து கொண்டே இருந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. தொடரின் அடுத்த போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இரு அணிகளும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றன. வரும் ஜனவரி 7-ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் மூன்று வித ஃபார்மெட்டுக்கும் மூன்று கேப்டன்கள் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.