அயலான் | ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்கும் சித்தார்த்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார்.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் தாமதமானது. இதனையடுத்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றாக வரும் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.