சென்னை: பிரபு தேவா – மடோனா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
தமிழில், ‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, ‘காதல் கிறுக்கன்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘வியாபாரி’ போன்ற படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றனர். படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்க டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது.
விநாயக மூர்த்தி இசையமைக்கும் படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்துக்கு ’ஜாலியோ ஜிம்கானா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை வெங்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.