Last Updated : 17 Dec, 2023 12:37 AM
Published : 17 Dec 2023 12:37 AM
Last Updated : 17 Dec 2023 12:37 AM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த மாதம் இந்த போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போக்கோ சி65 போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.74 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
- 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
- டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.8,499 முதல் தொடங்குகிறது
- நாளை (டிச.18) முதல் இந்த விற்பனைக்கு வர உள்ளது. குறிப்பிட்ட கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் ரூ.1,000 வரை விலையில் சலுகை கிடைக்கிறது
FOLLOW US
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in