ஹாலிவுட் நடிகர் வின் டீஸல் மீது பாலியல் குற்றச்சாட்டு!

கலிஃபோர்னியா: ‘ஃபாஸ்ட் அன் ஃபியூரியஸ்’ சீரிஸ் படங்கள் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வின் டீஸல் மீது அவரது முன்னாள் உதவியாளர் பாலியல் புகார் அளித்து கலிஃபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்ட்ரா ஜோனாசன் (Astra Jonasson) தொடர்ந்துள்ள வழக்கில், “கடந்த 2010-ம் ஆண்டு ‘ஃபாஸ்ட் ஃபைவ்’ படப்பிடிப்பின்போது அட்லாண்டாவுக்கு சென்றோம். அங்கே வின் டீஸல் தங்கியிருந்த அறையில் அவருக்கு உதவுவதற்காக பணியமர்த்தப்பட்டேன். அப்போது அவர் தங்கியிருந்த அறைக்கு உதவிக்காக சென்றபோது, என்னை பிடித்து இழுத்து தள்ளினார். நான் எவ்வளவு கெஞ்சியும் அவர் விடவில்லை.

என்னை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தார். தொடர்ந்து சுய இன்பம் செய்துவிட்டு, என்னை தள்ளிவிட்டுச் சென்றார். அவரை எதிர்த்ததன் விளைவாக என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டனர்” என குறிப்பிட்டுள்ளார். வின் டீஸல் தன் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.