மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர், இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
புனேயில் வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் எதிரான ஆட்டத்தின்போது கணுக்காலில் காயம் ஏற்பட, தொடரில் விலகினார் ஹர்திக். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அவர் அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானில் நடக்கும் டி20 தொடரிலும் விளையாடவில்லை. இப்போது வரவிருக்கும் ஐபிஎல் சீசனிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் 2024 மினி ஏலத்துக்கு முன்பாகவே, ட்ரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகளும், அதேநேரம் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் சீசனில் விளையாடுவது சந்தேகம் என வெளியாகியுள்ள தகவல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக இருக்கும்.