‘எனக்கு சோறு போட்ட தாய் விஜயகாந்த்' – எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர்

சென்னை: விஜயகாந்த் உடலுக்குஅஞ்சலி செலுத்த வந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், அவரது உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் அவர் கூறியதாவது: விஜயகாந்தைப் பார்க்கப் போனா உடனேயே ‘சாப்பிட்டியா?’ன்னுதான் கேட்பாரு. லேசா தயங்கினாலே ‘முதல்ல போயி சாப்பிட்டுட்டு வா, அப்புறம்தான் பேசுவேன்’னு சொல்வார். இனிமே யார் அப்படி கேட்கப் போறாங்க?

எங்க அண்ணனை இனி எந்த ஜென்மத்துல பார்க்க போறேன்னு தெரியலையே? எனக்கு அவர் அண்ணன் மட்டுமல்ல, எனக்கு அம்மா, சோறு போட்ட தாய். அப்படி ஒரு கம்பீரமா பார்த்த அவரை, இப்படிப் பார்க்கும்போது நெஞ்சு வெடிச்சுரும் போலிருக்கு. அவர் எல்லாருக்கும் இறைவனா வாழ்ந்தார். இன்னைக்கு அவரே இறைவனா ஆயிட்டார். அவர் ஆன்மா கூட இருந்து வழி நடத்தும். இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் கூறினார்.