2023-ல் கால்பந்து உலகில் அதிக கோல்களை பதிவு செய்த டாப் 5 வீரர்கள்: ரொனால்டோ முன்னிலை

சென்னை: நடப்பு ஆண்டில் கால்பந்தாட்ட நட்சத்திர ஆட்டக்காரர்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும் புதிய கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர். 2026 உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகளில் மூன்று கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் விளையாடி வருகின்றன. இது தவிர கிளப் அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச அணிகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

அண்மையில் தான் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோலடித்து நட்சத்திர கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை புரிந்தார். அதே நேரத்தில் எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்தார் லயோனல் மெஸ்ஸி.

2023-ல் யார் டாப்?

  • ரொனால்டோ – 53 கோல்கள் (போர்ச்சுகல் மற்றும் அல் நசீர் கிளப் அணி)
  • ஹாரி கேன் – 52 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் கிளப் அணி)
  • எம்பாப்பே – 52 கோல்கள் (பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணி)
  • எர்லிங் ஹாலண்ட் – 50 கோல்கள் (நார்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி)
  • டெனிஸ் புவாங்கா – 40 கோல்கள் (காபோன் மற்றும் எல்ஏஎஃப்சி)